© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனப்பாணியிலான நவீனமயமாக்கம் என்பது மக்கள் அனைவரும் வளம் பெறுவதற்கான நவீனமயமாக்கமாகும். மிகப் பரந்துபட்ட மக்களின் அடிப்படை நலன்களை நனவாக்கி நன்கு பேணிக்காத்து வளர்க்க வேண்டும். பொதுவான செழிப்பைப் பயனுள்ளதாக முன்னெடுக்க வேண்டும் என்று 16ஆம் நாள் துவங்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் ஷிச்சின்பிங் வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், பொதுவான செழிப்பு என்பது சுமார் 2500ஆண்டுகளுக்கு முன்பு, கன்ஃபூசியஸ் தத்துவத்திலிருந்து வளர்ந்ததாகும். சீனப்பாணி நவீனமயமாக்கத்திற்கு 5 சிறப்பம்சங்கள் உண்டு. அதாவது, மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நவீனமயமாக்கம். அனைவரும் வளம் பெறுவதற்கான நவீனமயமாக்கம். பொருள் மற்றும் தார்மீக நாகரிகம் ஒருங்கிணைந்த நவீனமயமாக்கம், மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழும் நவீனமயமாக்கம். அமைதியான வளர்ச்சிப் பாதையில் நடந்து செல்லும் நவீனவயமாக்கமாகும் ஆகியவை அடக்கம்.