வறுமை ஒழிப்புக்கான சீனாவின் சர்வதேச ஒத்துழைப்பு
2022-10-17 16:46:44

அக்டோபர் 17ஆம் நாள் சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகும். கடந்த 10 ஆண்டுகளில், சீனா சொந்த வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபட்டதோடு, வறுமை ஒழிப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வ பங்கினை அளித்துள்ளது. சர்வதேச வறுமை ஒழிப்பில் முன்னோடியாகவும் பங்காற்றுபவராகவும், சீனா, பல்வேறு நாடுகளுடன் இணைந்து, வறுமையில்லா கூட்டாக வளரக் கூடிய மனித பொது சமூகத்தைக் கட்டியமைக்க பாடுபட்டு வருகிறது.

இது குறித்து ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் கூறுகையில்,

ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு, சீனா ஒத்துழைப்பின் மூலம் கூட்டாக நலன் பெற்று வளரும் கொள்கையை மேற்கொண்டுள்ளது. இதர நாடுகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வரும் சீனா, உலகளவிலான வறுமையை ஒழித்து வருகின்றது. உலக வறுமை ஒழிப்பு இலட்சியத்துக்கு சீனா ஆற்றி வரும் முக்கிய பங்கு இதுவோ ஆகும் என்றார்.