வரி குறைப்புத் திட்டம் ரத்து செய்ய பிரிட்டன் அறிவிப்பு
2022-10-18 16:25:23

பிரிட்டன் அரசு செப்டம்பரில் அறிவித்த பெருமளவு வரி குறைப்புத் திட்டத்திலுள்ள கிட்டத்தட்ட அனைத்து வரி குறைப்பு நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக அந்நாட்டின் நிதி அமைச்சராகப் புதிதாக பதவியேற்ற ஜெரமி ஹண்ட் 17ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பொருளாதாரத்தின் நிலைப்புத் தன்மையை உறுதிப்படுத்தி பிரிட்டன் அரசின் நிதி கொள்கை மீதான வெளியுலகத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துவது இந்த புதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட எரிசக்தி விலை உத்தரவாத திட்டம் 2ஆண்டுகளுக்குப் பதிலாக, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே நீடிக்கும் என்று அவர் கூறினார்.

பொருளாதாரத்தை மீட்டெக்கும் விதம், பிரிட்டன் அரசு செப்டம்பர் 23ஆம் நாள் பெருமளவான வரி குறைப்புத் திட்டத்தை அறிவித்தது. ஆனால் நிதி சந்தைக்குப் பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவில் குறைந்துள்ளது.

மேலும், பிரிட்டன் அரசு வரி குறைப்பு திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்ததால், அமெரிக்க டாலர் குறியீடு 17ஆம் நாள் 1.13விழுக்காடாக சரிவடைந்தது.