மனிதகுலத்தின் நவீனமயமாக்கத்துக்கு புதிய தெரிவை வழங்கிய சீனப்பாணி நவீனமயமாக்கம்
2022-10-18 10:19:03


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு 16ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சோஷலிச நவீனமயமாக்க நாட்டை உருவாக்குவது பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் வழங்கிய அறிக்கையில், நெடுநோக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சீனப்பாணி நவீனமயமாக்கத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் அடிப்படை கோரிக்கைகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச சமூகத்தின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

நவீனமயமாக்கம் என்பது பன்னாட்டு மக்களின் பொது ஆர்வமாகும். அண்மையுகத்தில் சீன மக்கள் நனவாக்க பாடுபட்டு வரும் இலக்கு இதுவாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின்பு, சீனப்பாணி நவீனமயமாக்கத்தின் வளர்ச்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சீனப்பாணி நவீனமயமாக்கம் மக்களை மையமாக கொள்வதில் ஊன்றி நின்று மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. நவீனமயமாக்கத்துக்குச் சீனா புதிய அம்சம் மற்றும் முக்கியத்துவம் வழங்கி பிற நாடுகளுக்கு முன்மாதிரியாக உருவாகியுள்ளது என்று செர்பிய முன்னாள் அரசுத் தலைவர் போரிஸ்தாடிக் குறிப்பிட்டார்.

வளர்ந்த மேலை நாடுகளின் நூற்றுக்கணக்கான தொழில்மயமாக்கல் முன்னேற்றத்தைச் சீனா சில பத்தாண்டுகளில் அடைந்து வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான சமூகம் ஆகிய இரண்டு அதிசயங்களைப் படைத்துள்ளது. சீனப்பாணி நவீனமயமாக்கத்தின் அனுபவங்கள், மனிதகுலத்தின் நவீனமயமாக்கத்துக்கு முக்கிய பங்காற்றிப் புதிய தெரிவை வழங்கியுள்ளது. அதே வேளையில், வளரும் நாடுகள் நவீனமயமாகுதலில் புதிய வழிகளைச் சீனா விரிவாக்கியுள்ளது. ஒவ்வொரு நாடும் சொந்த நடைமுறை நிலைமைகளுக்கு ஏற்ப உரிய நவீனமயமாக்க பாதையைக் கண்டுபிடித்து மாபெரும் வளர்ச்சியை நனவாக்க முடியுமென சீன நவீனமயமாக்கத்தின் வெற்றி காட்டியுள்ளது.

சொந்த வளர்ச்சியை நனவாக்கியதோடு, உலகத்துக்கும் பங்காற்றும் சீனப்பாணி நவீனமயமாக்க பாதை மேலும் விரிவாக வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம்.