2ஆவது உலக உணவு மன்றக் கூட்டம்
2022-10-18 10:12:39

2ஆவது உலக உணவு மன்றக் கூட்டம் 17ஆம் நாள் இத்தாலியின் ரோம் நகரில் நேரடியாகவும் இணையவழியிலும் துவங்கியது. ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஏற்பாடு செய்த இக்கூட்டம் 5 நாட்கள் நீடிக்கும்.

இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்துவது, வறிய நாடுகளுக்கான முதலீட்டைத் தேடுவது, உணவு அமைப்புமுறையின் மாற்றத்தை முன்னேற்றுவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வலுப்படுத்துவது, வளர்ந்து வரும் உலகளாவிய உணவு நெருக்கடியைச் சமாளிப்பது ஆகியவை இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

முதலாவது உலக உணவு மன்றக் கூட்டம், 2021ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் இணைய வழியில் நடைபெற்றது.