சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான ஊழல் ஒழிப்புப் பணி
2022-10-18 16:59:01

கடந்த 10 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஊழல் ஒழிப்புப் பணியைப் பெரிதும் முன்னேற்றியுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இது விரிவான முறையில் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு பற்றி அக்போடர் 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாடு கண்காணிப்பு கமிட்டியின் துணை இயக்குநர் சியாவ் பெய் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில், மக்களே முதன்மை என்பதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஊன்றி நின்று, மக்களின் நலன்களை அலட்சியம் செய்த பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து, ஊழல் புரிந்த அதிகாரிகளை கண்டிப்பான முறையில் தண்டித்தது. இதனால் மக்களின் மனநிறைவு பெரிதும் உயர்ந்துள்ளது என்றார்.

மேலும், கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வது பன்முகங்களிலும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் சுய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ஊழல் ஒழிப்பு என்பது, முழு அளவிலான சுய சீர்திருத்தமாகும் என்றார்.