சீனாவின் நிலைமைக்குப் பொருந்திய சீன பாணி நவீனமயமாக்கம்
2022-10-18 18:51:24

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்கான குவாங்சி பிரதிநிதிக் குழுவின் விவாதத்தில் தோழர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 17ஆம் நாள் கலந்து கொண்ட போது கூறுகையில், சீனப் பாணி நவீனமயமாக்கம், சீனாவின் நிலைமைக்குப் பொருந்தியது என்றார்.

மேலும், புதிய யுகத்தில், சீன பாணி நவீனமயமாக்கத்தை கட்சி வெற்றிகரமாக முன்னேற்றி விரிவுபடுத்தியுள்ளது. கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் உருவாக்கப்படும் முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துவது தற்போதைய மிக முக்கியக் கடமையாகும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 16ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. ஷி ச்சின்பிங் 19ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் அறிக்கையை வழங்கிய போது கூறுகையில், சீனாவின் பல்வேறு தேசிய இன மக்களுக்குத் தலைமை தாங்கி, சோஷலிச நவீனமயமாக்க வல்லரசைப் பன்முகங்களிலும் கட்டியமைத்து, 2வது நூற்றாண்டு வளர்ச்சிக் குறிக்கோளை நனவாக்கி, இந்நவீனமயமாக்கத்தின் மூலம் சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை 2296 ஆகும். அவர்களில் 40 சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த 264 கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.