வெளிநாட்டு முதலீட்டின் வெளியேற்றத்துக்கு சீனாவின் நம்பிக்கையுடன் கூடிய பதில்
2022-10-18 19:11:37

தொழில் சங்கிலியின் மேன்மையிலிருந்து எங்களுக்கு நம்பிக்கை வருகிறது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியைச் சேர்ந்த ஜியாங்சூ மாநிலத்தின் குன்ஷான் நகரக் கட்சிக் குழுச் செயலாளர் சோ வெய் தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுப் பிரதிநிதியான அவர், கட்சிப் பிரதிநிதிகளுக்கான முதல் நேர்காணல் நிகழ்வில் வெளிநாட்டு முதலீட்டின் வெளியேற்றம் குறித்து பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.

சாம்சாங் மின்னணு நிறுவனத்தின் தலைவர் ஹுவாங் டேவ்க்-கிவூ கூறுகையில், முழுமையான வினியோகச் சங்கிலி, வலுவான பொருள் புழக்க முறைமை, பெரிய சந்தை, புத்தாக்க ஊக்குவிப்புக்கான சலுகைக் கொள்கை, உறுதியற்ற தன்மை சமாளிப்புத் திறன் ஆகியவற்றை சீனா கொண்டுள்ளது. இவை, சாம்சாங் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதன் காரணங்களாகும் என்று தெரிவித்தார்.

ஐஃபோன் திறன்பேசி, கலிஃபோனிய வடிவமைப்பு மற்றும் சீன தயாரிப்பு என்ற நிலையிலிருந்து, இருநாடுகளின் பொது படைப்பாக மாறியுள்ளது என்பதை நியுயார்க் டைம்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும், ஃபோர்ட் வாகன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபார்லெய் கூறுகையில், வாகனத் தொழிலின் மின்சார மயமாக்கம், உலக வினியோகச் சங்கிலியைச் சீரமைத்து வருகிறது. இதில் சீனா முக்கிய பங்காற்றி வருகிறது என்று குறிப்பிட்டார்.

உலக வினியோகச் சங்கிலியில் சீனாவின் முக்கிய பங்கினையை அமெரிக்க-சீன வணிக கவுன்சிலின் தலைவர் கிரைக் ஆல்லென்னும் வெகுவாகப் பாராட்டினார்.