உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பில் ஊன்றி நிற்கும் சீனா
2022-10-18 11:29:01

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. தோழர் ஷிச்சின்பிங் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் அறிக்கை வழங்கினார். உயர் தர வளர்ச்சியை முன்னேற்றச் சீனா பாடுபட்டு, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பில் ஊன்றி நிற்கும் என்று அவர் கூறினார். வெளிநாட்டுத் திறப்புக்கான அடிப்படைக் கொள்கையில் சீனா ஊன்றி நின்று, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவது என்ற நெடுநோக்கை உறுதியாகக் கடைபிடிக்கும். சீனாவின் புதிய வளர்ச்சி, உலகத்துக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கி, திறந்த உலகப் பொருளாதாரத்தை முன்னேற்றி, பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நலன் பயக்கும். உயர் தர வெளிநாட்டுத் திறப்பைச் சீனா முன்னேற்றி, வர்த்தகச் வல்லரசு கட்டுமானத்தை விரைவுபடுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றி, பலதரப்பு, நிதானம் ஆகியவை படைத்த சர்வதேசப் பொருளாதார நிலைமையையும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவையும் சீனா பேணிகாக்கும் என்று அவர் கூறினார்.

தற்போது, சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு உலகப் பொருளாதாரத்தில் 18.5 விழுக்காடாகும். உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தவிரவும் சீனாவின் நபர்வாரி மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 10 ஆயிரம் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.