பிரிட்டன் இருப்புப்பாதை சங்கம் நவம்பரில் 3நாட்கள் வேலை நிறுத்தம்
2022-10-19 14:12:38

ஊதியம் உயர்வு மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்த கோரி, நவம்பர் 3,5,7ஆகிய நாட்களில் வேலை நிறுத்தம் செய்வதாகப் பிரிட்டன் இருப்புப்பாதை, கடல் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் 18ஆம் நாள் அறிவித்தது.  

கடந்த சில மாதங்களில் பிரிட்டன் இருப்புப்பாதை தொழிலாளர்கள் பன்முறையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்வாண்டு வருமானம் 4விழுக்காடு அதிகரித்து அடுத்தாண்டில் மீண்டும் 4விழுக்காடு அதிகரிப்பதென்ற உடன்பாட்டை இப்போது பிரிட்டன் நெட்வொர்க் ரயில் நிறுவனம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று தொழிலாளர் சங்கம் தெரிவித்தது. மேலும் நல்ல நிபந்தனைகளை வழங்கினாலும் தொழில் சங்கம் ஒப்புக்கொள்ளவில்லை என்று நெட்வொர்க் ரயில் நிறுவனம் பதிலளித்தது.