சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான 2வது நேர்காணல்
2022-10-19 17:23:30

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான 2வது நேர்காணல் நிகழ்ச்சி அக்டோபர் 18ஆம் நாளிரவு நடைபெற்றது. ஷாங்காய், ஜியாங்சூ, சேஜியாங், அன்ஹுய் உள்ளிட்ட 7 பிரதிநிதிக் குழுக்களின் செய்தித் தொடர்பாளர்கள் இதில் பங்கெடுத்து, கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு பல்வேறு இடங்களின் வளர்ச்சியில் பெறப்பட்ட வரலாற்றுச் சாதனைகளை எடுத்துக்கூறினர். யாங்சி ஆற்றுக் கழிமுகப் பிரதேச ஒருமைப்பாட்டு வளர்ச்சிக்கான நெடுநோக்கு திட்டத்தின் நடைமுறையாக்கம் மற்றும் பயன்கள், சீனா மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாகும்.