இயற்கை எரிவாயு விலையுயர்வைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய நடவடிக்கைகள்
2022-10-19 15:38:19

இயற்கை எரிவாயு விலை உயர்வைச் சமாளித்து இவ்வாண்டின் குளிர்கால எரிசக்தி விநியோக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இயற்கை எரிவாயு கூட்டு கொள்முதல் செய்வது, ஐரோப்பாவின் இயற்கை எரிவாயு விலை வரம்பை விதிப்பது, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எரிசக்தி விநியோகத்தை ஒருங்கிணைப்பது முதலிய புதிய அவசர நடவடிக்கைகளை ஐரோப்பிய ஆணையம் 18ஆம் நாள் முன்வைத்தது.

இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அனுமதியைப் பெற வேண்டும்.  வரும் 20, 21ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இது குறித்து விவாதம் நடத்துவர்.