மக்களின் உரிமையை உத்தரவாதம் செய்யும் முழு நடைமுறை ஜனநாயகம்
2022-10-19 14:27:14

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 16ஆம் நாள் துவங்கியது. அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், பன்முகங்களிலும் முழு நடைமுறை மக்கள் ஜனநாயகத்தின் சிறப்பியல்பு மற்றும் சாதகத்தை விளக்கிக் கூறினார். 

இது, புதிய யுகத்தில் சீனாவின் சோஷலிச ஜனநாயக அரசியலுக்குத் திசையைக் காட்டி, சர்வதேசச் சமூகம், சீன ஜனநாயகத்தைப் பார்வையிடுவதற்கு ஒரு முக்கிய ஜன்னலைத் திறந்து வைக்கும்.

முழு நடைமுறை ஜனநாயகத்தின் சாராம்சமானது, சோஷலிச ஜனநாயகமாகும். இதன் மூலம், தேர்தல், கலந்தாய்வு, முடிவெடுத்தல், மேலாண்மை, கண்காணிப்பு முதலியவை ஒன்றிணைக்கப்படும். நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் மக்களின் வேண்டுகோள் மற்றும் விருப்பங்கள் கேட்டறியப்படலாம். இத்தகைய பன்முகத் தன்மை கொண்டு முழுவதையும் உள்ளடக்கும் ஜனநாயக முறைமை மூலம், சீன மக்கள் நாட்டின் உண்மையான உரிமையாளராக இருக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் சீனா, வறுமை ஒழிப்புடன்,  குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்கியுள்ளது. தற்போது சீனா, பன்முகங்களிலும் சோஷலிச நவீனமயமான நாட்டைக் கட்டத் தொடங்கி, பொதுவான செழிப்பு என்னும் இலக்கை நோக்கி நடை போட்டு வருகிறது. இப்போக்கில் முழு நடைமுறை ஜனநாயகம், தனது மிகுந்த உயிராற்றலைக் காட்டியுள்ளது.

உலகம் பலவகைப்பட்டது. உலகளவில் ஜனநாயகம், ஒரே மாதிரியாக அல்ல. சொந்த நாட்டின் நிலைமைகளுக்குப் பொருந்திய ஜனநாயகம் தான், நம்பகமானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.