புதிய யுகத்தில் சீனாவின் சட்ட ஒழுங்கு அமைப்புமுறை கட்டுமானம்
2022-10-19 16:34:41

அக்டோபர் 19ஆம் நாள் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான 3வது செய்தியாளர் கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணையத்தின் துணைப் பொதுச் செயலாளர் யின்பய் கூறுகையில், தற்போது, சீனாவில் சட்டப்படியான ஆட்சி முறை அடிப்படையில் உருவெடுக்கப்பட்டுள்ளது. சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சட்ட ஒழுங்கு அமைப்புமுறையின் கட்டுமானம் வேகமாக்கப்பட்டு வருகிறது என்றார்.

தகவலின்படி, கடந்த செப்டம்பர் இறுதி வரை, சீனாவின் நடைமுறையிலுள்ள சட்டங்களின் எண்ணிக்கை 293. கடந்த 10 ஆண்டுகளில், கட்சியில் 159 சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன அல்லது திருத்தப்பட்டுள்ளன.

மேலும், சீனச் சட்ட நீதி அமைச்சகத்தின் துணைத் தலைவர் ஸுவோலீ இக்கூட்டத்தில் கூறுகையில், தேசிய பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கம், பொதுச் சுகாதாரம், உயிரின நாகரிகம், வெளிநாட்டு விவகாரங்களுடன் தொடர்புடைய சட்ட ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய துறைகளில் சட்டமியற்றல் பணியைச் சீனா வலுப்படுத்தி, புதிய யுகத்தில் சீரதிருத்தம் மற்றும் வளர்ச்சிக்குப் பொருத்தமற்ற சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைத் திருத்தவுள்ளது அல்லது நீக்கவுள்ளது என்றார்.