ஹாங்காங் சிறப்பு நிர்வாக அதிகாரியின் நிர்வாக அறிக்கை
2022-10-19 17:27:22

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில் நிர்வாக அதிகாரியாக பதவியேற்ற பிறகு முதல் நிர்வாக அறிக்கையை  லி காச்சியு 19ஆம் நாள் ஹாங்காங் சட்டப் பேரவையில் வெளியிட்டார். பொருளாதார வளர்ச்சி, பொது மக்களின் வாழ்க்கை மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளிலான நடவடிக்கைகள் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஒரு நாட்டில் இரு அமைப்பு முறைகள் என்ற கொள்கையில், ஹாங்காங், உள் பிரதேசத்தின் பெரிய சந்தையில் பங்கெடுத்துள்ளதோடு, உலகத்துடன் தொடர்பு கொண்டு, உள் பிரதேசத்தையும் உலகத்தையும் இணைக்கும் பாலமாக விளஹ்குகிறது. 14ஆவது ஐந்தாண்டு திட்டம், குவாங் டொங்-ஹாங்காங்-மக்காவ் பெரிய விரிகுடா பிரதேச ஆக்கப்பணி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு ஆகியவை, ஹாங்காங்குக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்று லி காச்சியு தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசுடன், பொது மக்களின் இன்பத்துக்கும் ஹாங்காங் வளர்ச்சிக்கும் பாடுபடுவதாக அவர் தெரிவித்தார்.