கவனத்தை ஈர்த்துள்ள உயர்தர வளர்ச்சித் திட்டம்
2022-10-19 16:30:33

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையில், உயர்தர வளர்ச்சியே, நவீன சோஷலிச நாட்டின் பன்முகக் கட்டுமானத்தில் முதன்மைப் பணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெய்ஜிங், தியன்ஜின், ஹேபெய் உள்ளிட்ட 7 பிரதிநிதிக் குழுக்களின் செய்தித் தொடர்பாளர்கள் 18ஆம் நாள் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் இம்மாநாட்டுக்கான அறிக்கையைக் கற்றுக் கொண்டு விவாதம் நடத்திய நிலைமை பற்றி அறிமுகம் செய்ததோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அவர்களின் உரைகளில் உயர்தர வளர்ச்சி என்பது முக்கியமான அம்சமாகும்.

பெய்ஜிங் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், புதுப்பிக்க முடியாத உற்பத்திக்கான ஒதுக்கீட்டைக் குறைக்கவும், புத்தாக்கத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வேண்டும். ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான பெய்ஜிங்கின் நிதி ஒதுக்கீடு 6.53 விழுக்காட்டுடன், சீனாவின் முன்னணியில் இருப்பதுடன், பல வளர்ந்த நாடுகளின் நிலையையும் தாண்டியுள்ளது என்று கூறினார்.

ஜீலின் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், அடுத்த கட்டத்தில் ஜீலின் தனது வேளாண்துறையின் சிறப்பான மேன்மைகளைப் பயன்படுத்தி, தகவல், எண்முறை மற்றும் நுண்ணறிவு மயமாக்க கட்டுமானத்தை விரைவுபடுத்தும். நாட்டின் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதில் மேலும் பெரும் பங்காற்றும் விதம், தானிய உற்பத்தித் திறனையும் முக்கிய வேளாண் பொருட்களின் வினியோகத்தையும் தொடர்ந்து உயர்த்தி வரும் என்று தெரிவித்தார்.