சீனாவின் உதவிக்கு பாகிஸ்தான் தலைமை அமைச்சரின் நன்றி
2022-10-20 18:24:58

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷெரிஃபுடன் 19ஆம் நாள் இஸ்லாமாபதில் சீனாவின் வெள்ளத் தடுப்பு நிபுணர் குழுவினர் சந்திப்பு நடத்தினர். மிக சிக்கலான நேரத்தில் சீன அரசு, நிபுணர் குழு ஒன்றை அனுப்பி, பாகிஸ்தானின் வெள்ளத் தடுப்புக்கும் பேரழிவு குறைப்புக்கும் உதவி அளித்ததற்கு ஷெரிஃப் நன்றி தெரிவித்தார்.

இவ்வாண்டு கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு சீன அரசும் மக்களும் நிறைய உதவிகளை அளித்துள்ளனர் என்று ஷேரிஃப் சுட்டிக்காட்டினார்.

சீனா பாகிஸ்தானுக்கு தொடர்ந்து உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்கும் என்று பாகிஸ்தானுக்கான சீன தூதர் நுங் ரோங் தெரிவித்தார்.