அருமையான வாழ்க்கைக்குப் பாடுபடுவோம்:ஷிச்சின்பிங்
2022-10-20 09:17:24

நாட்டின் மேலாண்மைக்கு நிலையான விதி உண்டு. மக்களுக்கு நலனளிப்பது அதன் அடிப்படை. மிக அருமையான வாழ்க்கைக்கு நாம் கூட்டாகப் பாடுபடுவோம் என்று ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் தெரிவித்தார்.

2100 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த வார்த்தை, இன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்களுக்கும் ஆட்சி புரிவதற்கு அடிப்படை.  2020ஆம் ஆண்டு, சீன மக்களை அவதிப்படுத்திய வறுமை பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்பட்டது. ஐ.நாவின் 2030ம் ஆண்டின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் வறுமை ஒழிப்பு இலக்கை, சீனா 10 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே நனவாக்கியுள்ளது.

பொது மக்களை மகிழ்ச்சியாக வாழ வைப்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையான குறிக்கோளாகும். தற்போது, முதுமையடைதல், நோய், வேலையின்மை, வேலை காயம் முதலிய அபாயங்களைச் சமாளிக்கும் அமைப்பு முறை ரீதியான உத்தரவாதம் மக்களுக்கு கிடைத்துள்ளது. 2021ஆம் ஆண்டு நாட்டு மக்களின் நபர்வாரி வருமானம், கடந்த 10 ஆண்டுகளில் 78 விழுக்காடு அதிகரித்தது. சராசரி ஆயுள் காலம் 2021ஆம் ஆண்டு வரை 78.2ஆக உயர்ந்துள்ளது.