சீனாவுடன் தூதாண்மையுறவை நிறுவிய நாடுகளின் எண்ணிக்கை 181ஆக அதிகரிப்பு
2022-10-20 14:02:29

கடந்த 10ஆண்டுகளில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த தூதாண்மைப் பணியில் வரலாற்றில் முக்கியத்துவயம் வாய்ந்த பன்முகமான சாதனைகள் கிடைத்துள்ளன. சீனாவுடன் தூதாண்மையுறவை நிறுவிய நாடுகளின் எண்ணிக்கை 172இலிருந்து 181ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகள் மற்றும் பிரதேச அமைப்புகளுடன் நிறுவப்பட்ட கூட்டாளியுறவுகளின் எண்ணிக்கை 41இலிருந்த 113ஆக உயர்ந்துள்ளது என்று சீனத் துணை வெளியுறவு அமைச்சர் மாஜாவோச்சு 20ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது, சீனாவின் சர்வதேச செல்வாக்கு தெளிவாக உயர்ந்துள்ளது. முன்பு இல்லாத  அளவில் உலக நிர்வாகத்தில் சீனா கலந்து வருகிறது. பலதரப்புவாதத்தைப் பேணிக்காப்பதில் ஆதரத்தூணாக பங்காற்றி வருகிறது.