சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான 4வது செய்தியாளர் கூட்டம்
2022-10-20 17:30:12

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான 4வது செய்தியாளர் கூட்டம் அக்டோபர் 20ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. “சீனத் தனிச்சிறப்புடைய பெரிய நாட்டுத் தூதாண்மை முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஷி ச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனை”என்பது இக்கூட்டத்தின் கருப்பொருளாகும்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் கட்சிக் கமிட்டி உறுப்பினரும், துணை அமைச்சருமான மா சாவ்ஷு கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில், சீனாவின் உலகத்துடனான உறவு வரலாற்று ரீதியான முன்னேற்றம் பெற்று, சர்வதேச சமூகத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.

மேலும், உண்மையான பலதரப்புவாதத்தைச் சீனா செயல்படுத்துவதுடன், ஒருதரப்புவாதம், பாதுகாப்புவாதம் மற்றும் ஆதிக்கச் செயலை எதிர்த்து வருகிறது. அத்துடன், உலக மேலாண்மை அமைப்புமுறையின் கட்டுமானத்தில் சீனா ஆக்கமுடன் பங்கெடுத்து, கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பெருமளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், பிளவுபடும் உலகம், யாருக்கும் நலன் தராது. மனித குல பொது சமூகத்தின் உருவாக்கம், பல்வேறு நாட்டு மக்களின் எதிர்காலத்துக்குப் பொருந்தியது. உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காப்பதில், சீனா சொந்த வளர்ச்சியை முன்னேற்றி வருகிறது. அத்துடன், சொந்த வளர்ச்சியின் மூலம் உலக அமைதி மற்றும் வளர்ச்சியைச் சீனா மேலும் நன்றாகப் பேணிக்காத்து வருகிறது என்றும் மா சாவ்ஷு தெரிவித்தார்.