அமெரிக்க விலைவாசி உயர்வு இன்னும் கடுமையாக உள்ளது:அமெரிக்க பெடரல் ரிசர்வ்
2022-10-20 16:16:51

அமெரிக்க நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் குழு 19ஆம் நாள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. நாடளாவிலான பொருளாதார செயல்பாடுகள் தொகை ரீதியில் சிறிது அதிகரித்திருந்தாலும், விலைவாசி அதிகரிப்பு இன்னும் கடுமையாக நிலவுகிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படக் கூடும் என்ற கவலையை சில தொழில் நிறுவனங்களும் பிரதேசேங்களும் தெரிவித்தன என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த செப்டம்பர் முதல், அமெரிக்காவின் சில்லறை விற்பனைத் தொழில் ஒப்பீட்டளவில் நிலையாக வளர்ந்துள்ளது. சுற்றுலா தொழிலும் மீட்சியுற்றுள்ளது. மேலும் விநியோகச் சங்கிலி பற்றாக்குறையின் தணிவால், பல இடங்களின் தயாரிப்புத் தொழில் நிலையாகவும் குறிப்பிட்டளவிலும் வளர்ந்துள்ளது. ஆனால், தொழிலாளர்கள் சந்தையின் ஒட்டுமத்த நிலை இன்னும் கடுமையாக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.