ஒருசார்பு கட்டாய நடவடிக்கையை நீக்க வேண்டும்:சீனா வேண்டுகோள்
2022-10-20 16:50:27

ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரக் குழுவின் தற்காலிகத் தூதர் டாய் பிங் 19ஆம் நாள் ஐ.நா. பொது பேரவையின் 3ஆவது கமிட்டியில் மனித உரிமை பற்றி 25 நாடுகளின் சார்பாக கூட்டறிக்கை வழங்கி கூறுகையில், ஒருசார்பு கட்டாய நடவடிக்கை, மனித உரிமையைக் கடுமையாக மீறி, மனித நேய பேரிடரைத் தீவிரமாக்கும். இதனை உடனடியாகவும் முழுமையாகவும் நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஐ.நா. பொது பேரவையின் 3ஆவது கமிட்டியில் கருத்தொற்றுமை கொண்ட நாடுகளின் சார்பில் ஒருசார்பு கட்டாய நடவடிக்கையை நீக்குமாறு சீனா வேண்டுகோள் விடுத்தது இது மூன்றாவது முறையாகும். சீனா, பெலாரஸ், கியூபா, வட கொரியா, எகிப்து, ஈரான், பாகிஸ்தான், ரஷியா, இலங்கை, சிரியா உள்ளிட்ட 25 நாடுகள் இக்கூட்டறிக்கையில் கையொப்பமிட்டன.