சிபிசியின் 20ஆவது தேசிய மாநாட்டின் ஊடக மையத்தில் 4ஆவது நேர்காணல்
2022-10-20 17:11:00

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் ஊடக மையத்தில் அக்டோபர் 19ஆம் நாளிரவு நடைபெற்ற 4ஆவது நேர்காணல் நிகழ்ச்சியில், சோங்சிங், சிச்சுவான், குய்சோ, யுன்னான், திபெத், ஷான்சி, கான்சு ஆகிய 7 பிரதிநிதிக் குழுக்களின் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த சில நாட்களில் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையை உணர்வுப்பூர்வமாகக் கற்றுக் கொண்டு விவாதம் நடத்தியுள்ளதாகவும், கட்சி மற்றும் நாட்டு லட்சியத்தின் முன்னேற்றத் திசை, நெடுநோக்கு பார்வையுடன் கூடிய இவ்வறிக்கையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சீன-லவோஸ் இருப்புப்பாதை பற்றி யுன்னான் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கூட்டு கட்டுமானத்தில் மைல் கல் போன்ற இத்திட்டப்பணி நடைமுறைக்கு வந்த பிறகு பெரும் பயன் தந்துள்ளது. அதன் நெடுகிலுள்ள பகுதியின் வளர்ச்சிக்கு இந்த இருப்புப்பாதை உயிராற்றலைக் கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

திபெத் பிரதிநிதி குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமைதி, வளர்ச்சி, இயற்கைச் சூழல், எல்லை பாதுகாப்பு ஆகிய 4 முக்கிய பணிகளை நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் திபெத் செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.