பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்துக்குச் சீனா ஆதரவு
2022-10-20 19:30:05

பிரிக்ஸ் அமைப்பில் சேரும் விருப்பத்தை சௌதி அரேபியா பட்டத்து இளவரசர் வெளிப்படுத்தியுள்ளதாக தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ரமஃபோசா அண்மையில் கூறினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் அக்டோபர் 20ஆம் நாள் கூறுகையில், பிரிக்ஸ் நாடுகள் இவ்வமைப்பின் விரிவாக்கத்தைத் தொடங்குவதற்கு சீனா ஆக்கமுடன் ஆதரவு அளிப்பதோடு, “பிரிக்ஸ்+” என்ற ஒத்துழைப்பை புதிய கட்டத்துக்கு முன்னேற்றி வருகிறது என்றார்.

மேலும், 16 ஆண்டுகள் வளர்ச்சியுடன், பிரிக்ஸ் நாட்டு ஒத்துழைப்பு செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளதோடு, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றியுள்ளது. இதனால் தான், சர்வதேச சமூகத்தின் ஆதரவை பிரிக்ஸ் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.