சிபிசியின் 20ஆவது தேசிய மாநாட்டின் ஊடக மையத்தில் 3ஆவது நேர்காணல்
2022-10-20 17:01:19

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் ஊடக மையத்தில் அக்டோபர் 19ஆம் நாள் பிற்பகல் நடைபெற்ற 3ஆவது நேர்காணல் நிகழ்ச்சியில், ஷான்டோங், ஹேநான், ஹுபெய், ஹுநான், குவாங்டோங், குவாங்சி, ஹாய்நான் ஆகிய 7 பிரதிநிதிக் குழுக்களின் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை மேம்பாடு, உயிரினச் சூழல் நாகரிகம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு இடங்கள் பெற்றுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளையும் இவ்விடங்களில் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களையும் அவர்கள் எடுத்துக்கூறினர்.

மஞ்சள் ஆற்று கழிமுகத்தின் இயற்கைப் பாதுகாப்பு பற்றி ஷான்டோங் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் தொடர்புடைய கட்டுமானம் மற்றும் மேலாண்மை பணிகளுக்கு ஷான்டோங் மாநிலம் 13 ஆயிரம் கோடி யுவானுக்கு மேலான நிதி ஒதுக்கீடு செய்து, புதிய வளர்ச்சி சிந்தனையுடன் கரி குறைந்த பசுமையான உயர்தர வளர்ச்சியை முன்னேற்றியுள்ளது என்று தெரிவித்தார்.

குவாங்சி பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் குவாங்சி பிரதிநிதிக் குழுவின் விவாதத்தில் பங்கெடுத்து, குவாங்சியின் வளர்ச்சி குறித்து புதிய உயர் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்நிலையில், புதிய வளர்ச்சி சிந்தனையின் நடைமுறையாக்கம், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு விரிவாக்கம், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பசுமை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பான பணிகளை குவாங்சி செவ்வனே மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.