கத்தாரில் சூரிய ஒளி மின்நிலையம் இயக்கம்
2022-10-20 16:08:41

கத்தாரில் சீனத் தொழில் நிறுவனங்களால் கட்டப்பட்ட 800 மெகாவாட் திறன் கொண்ட அல்கர்சா சூரிய ஒளி மின்நிலையத்தின் துவக்க விழா 18ஆம் நாள் நடைபெற்றது. கத்தாரின் எமிர், தலைமை அமைச்சர், எரியாற்றல் விவகார அமைச்சர் முதலியோர் இவ்விழாவில் பங்கெடுத்தனர். சூரிய ஒளி மின்நிலையம், கத்தாரின் முதலாவது புதைபடிவமற்ற எரிப்பொருள் மின்நிலையம். மத்திய கிழக்கு பிரதேசத்தில் மிகப் பெரிய சூரிய ஒளி மின்நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மின் உற்பத்தி துவக்கம், கத்தாரின் புதிய எரியாற்றல் தொழிலின் வளர்ச்சிக்கு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது.

2020ஆம் ஆண்டு ஜுலையில் துவங்கிய இத்திட்டப்பணியில் மொத்தம் 41.7 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டது. தலைநகர் தோஹாவுக்கு மேற்கே 80 கிலோமீட்டரில் பாலைவனத்தில் அமைந்துள்ள இத்தளத்தில் 20 இலட்சத்துக்கும் அதிகமான சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

சீனத் தொழில் நிறுவனங்கள், தொழில் நுட்பப் புத்தாக்கம் மூலம், உற்பத்தியை உயர்த்தியுள்ளதால், மின் உற்பத்தித் திறன் 20 விழுக்காடு அதிகரிக்கத்துள்ளன.