சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பல நாடுகள் வாழ்த்துக்கள்
2022-10-21 16:40:44

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் போது, பல நாடுகளின் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிக்கும், பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கும் செய்திகள் மற்றும் கடிதங்கள் வழியாக, இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தியப் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் விஜய் ஜாலி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி மற்றும் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் தலைமையில், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சீனா வரலாற்றுச் சாதனைகளைப் பெற்றுள்ளது. இந்தியாவும் சீனாவும் மேலதிக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, இரு தரப்பு உறவின் வளர்ச்சியை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

நேபாளத்தின் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், முன்னாள் தலைமையமைச்சருமான ஓலி கூறுகையில், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி என்ற சீனக் கனவுக்கு இம்மாநாடு வலிமைமிக்க இயக்காற்றலை ஊட்டுவது உறுதி. இம்மாநாட்டில் உருவாக்கப்பட்ட கொள்கைகள் சீன மக்களின் நலன்களுக்குப் பொருந்தியது மட்டுமல்லாமல், உலகத்துக்கும் துணைப் புரியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.