அழகான சீனாவின் கட்டுமானத்தில் பெரிய முன்னேற்றம்
2022-10-21 18:52:51

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான ஊடக மையத்தில், 5ஆவது செய்தியாளர் சந்திப்பு அக்டோபர் 21ஆம் நாள் நடைபெற்றது. சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்சிக் குழு உறுப்பினரும் துணை அமைச்சருமான சாய் சிங், மனிதரும் இயற்கையும் இணக்கமாக வாழும் அழகான சீனாயைக் கட்டியமைப்பது என்ற தலைப்பில் செய்தியாளர்களுடன் பரிமாற்றம் செய்தார்.

அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் உயிரினச் சூழல் நாகரிகம் பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனையின் வழிகாட்டலில், தூய நீர் மற்றும் பசுமை மலை செல்வமாகும் என்பதையும் மலை, ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் முறையான நிர்வாகத்தையும் சீனா பின்பற்றி, உயிரினச் சூழல் நாகரிக கட்டுமானம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், சீனாவின் உயிரினப் பல்வகைமைப் பாதுகாப்பு பயனளித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் சீனாவின் கார்பன் வெளியேற்ற செறிவு 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட 48.4 விழுக்காடு குறைந்து, சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியை குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிறைவேற்றியுள்ளது. உலக சுற்றுச்சூழல் மேலாண்மையில் ஆழ்ந்த முறையில் பங்கெடுத்துள்ள சீனா பெரிய நாட்டின் பொறுப்பை வெளிப்படுத்தி, மனிதகுலத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.