புத்தாக்கத்தை மைய இடத்தில் வைத்து கொள்ள வேண்டும்——ஷிச்சின்பிங்
2022-10-21 15:10:27

புத்தாக்கம் ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கான ஆதாரமாகும். நாட்டின் வளர்ச்சிக்கான உந்து ஆற்றலாகும். கடந்த 10ஆண்டுகளில், அறிவியல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கத்தில் உலக கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைச் சீனா படைத்துள்ளது. புத்தாக்க நாடுகளின் வரிசையில் சீனா காலடியெடுத்து வைத்துள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம் முதலாவது உற்பத்தித்திறன். திறமைசாலி முதலாவது வளம். புத்தாக்கம் தான் முதலாவது உந்து ஆற்றல் ஆகியவற்றில் ஊன்றி நிற்க வேண்டும் என்றும், புத்தாக்க வளர்ச்சியின் நெடுநோக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.