அமைதி வளர்ச்சிப் பாதையில் நடந்து செல்லும் சீனா உலகத்தின் வாய்ப்பாகும்
2022-10-21 09:30:51

உலக அமைதியைப் பேணிக்காத்து கூட்டு வெற்றியை முன்னேற்றும் தூதாண்மைக் கொள்கையைச் சீனா எப்போதும் பின்பற்றி மனிதகுலத்தின் பகிர்வு எதிர்காலம் சமூகத்தைக் கட்டியமைக்கப் பாடுபட்டு வருகிறது. பெய்ஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் வழங்கிய அறிக்கையில் இதைத் தெரிவித்தார். அவரின் இந்தக் கூற்று சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமைதியான வளர்ச்சிப் பாதையில் செல்லும் சீனா நவீனமயமாகுவதற்கும் உலகின் அமைதி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகிறது. அமைதி தான் வளர்ச்சிக்கான அடிப்படையாகும். வளர்ச்சி அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும். தற்போது, நவீனமயமான சோஷலிச வல்லரசைக் கட்டியமைத்து 2ஆவது நூற்றாண்டு இலக்கை நனவாக்குவதில் சீனா முயற்சி செய்து வருகிறது. வெளிநாட்டுத் திறப்பு என்ற அடிப்படை கொள்கையில் சீனா தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. ஒன்றுக்கொன்று நலன் அளித்துக் கூட்டு வெற்றி பெறும் கொள்கையை உறுதியாகப் பின்பற்றி வருகிறது. சீனாவின் புதிய வளர்ச்சி மூலம் உலகத்துக்கும் புதிய வாய்ப்புகள் கொண்டு வரப்படுகிறது என்று  இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது. புதிய வளர்ச்சித் திட்டவரைவின் வழிகாட்டலுடன், சீனாவுக்கும் உலகத்துக்கும் இடையே மேலும் சிறந்த தொடர்பு உருவாகும் என்று இது வெளிக்காட்டுகிறது.

உலக அமைதியைப் பேணிக்காப்பதோடு, சொந்த நாட்டின் வளர்ச்சியையும் வளர்த்துள்ளது. அதே வேளையில் சொந்த வளர்ச்சி மூலம் உலக அமைதியை மேலும் நன்கு பேணிக்காத்து வருவதுடன், கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி வருவது சீனா பயணித்து வரும் அமைதியான வளர்ச்சிப் பாதையாகும்.