உயர் பணவீக்கம் மீது அமெரிக்கர்கள் பலர் கவலை
2022-10-21 16:01:56

அமெரிக்காவில் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரின் மத்தியில், 78விழுக்காட்டினர் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எதிர்மறை நிலைப்பாடு  கொண்டுள்ளனர். அமெரிக்கப் பொருளாதாரம் மோசமாகி வருகிறது என்று 73விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

பணவீக்க உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் திங்கள் முதல், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மொத்தமாக வட்டியில் 300 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது. ஆனால், பணவீக்கம் இன்னும் தணிவு அடையவில்லை. இந்நிலையில், ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டியை உயர்த்துவதாகவும், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மேலும் மெதுவாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.