நேபாளத்தில் சீனாவின் 10 ஆண்டுகால வளர்ச்சி பற்றிய கண்காட்சி
2022-10-21 16:36:40

சீனாவின் 10 ஆண்டுகால வளர்ச்சி பற்றிய படக் கண்காட்சி அக்டோபர் 20ஆம் நாள் நேபாளத்தின் தலைநகருக்கு அருகிலுள்ள லலித்பூர் நகரில் நடைபெற்றது. வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு, அறிவியல் தொழில் நுட்பம், சுகாதாரம், பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் சீனா பெற்றுள்ள சாதனைகள் இக்கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

நேபாளத்தின் பண்பாடு, சுற்றுலா மற்றும் பயணியர் விமானத் துறை அமைச்சர் இதில் உரை நிகழ்த்துகையில், அதிக மக்கள் தொகை கொண்ட சீனா அசாதாரண சாதனைகளைப் பெற்றுள்ளது. இவற்றிலிருந்து நேபாளத்துக்கும் உலகத்துற்கும் அனுபவங்கள் கிடைக்கும். உயிரினச் சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை தொழில் நுட்ப வளர்ச்சிக்கு சீனா முக்கியத்துவம் அளித்து வரும் செயல், பல்வேறு நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார்.

அந்நாட்டின் மார்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கூறுகையில், நடப்பு நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளம், வலிமை, ஜனநாயம், நாகரிகம், நல்லிணக்கம், அழகு ஆகியவை படைத்த நவீன சோஷலிச நாட்டை உருவாக்கும் இலக்கை நோக்கி சீனா முன்னேறி வருகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இந்த இலக்கு நனவாவது உறுதி என்று தெரிவித்தார்.