சிபிசியின் 20ஆவது தேசிய மாநாட்டின் 3ஆவது தலைமைக் குழுக் கூட்டம்
2022-10-21 18:51:00

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் தலைமைக் குழுவின் 3ஆவது கூட்டம் அக்டோபர் 21ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. 20ஆவது மத்தியக் கமிட்டியின் உறுப்பினர் மற்றும் மாற்று உறுப்பினர், ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் உறுப்பினர் ஆகியோருக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் வரைவு இக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆழ்ந்த ஆய்வுக்காக, பல்வேறு பிரதிநிதிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தோழர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

இப்பட்டியல் கண்டிப்பான ஒழுங்கு முறைப்படி கட்சிக்குள்ளான ஜனநாயகத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்கள், துறைகள் மற்றும் தொழில்களில் ஈடுபடும் தலைசிறந்த கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

நடப்பு தேசிய மாநாட்டில் அதிகாரப்பூர்வத் தேர்தல் 22ஆம் நாள் முற்பகல் நடைபெற உள்ளது.