சமநிலையில் திறப்பையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ளும் சர்வதேச கூட்டாளியுறவு
2022-10-21 16:56:52

நிறைய துணை பொருட்களைச் சேர்த்தால், உணவுச் சாறின் சுவை அதிகரிக்கும் என்ற பழமொழி சீனாவில் உள்ளது. திறப்புத் தன்மை வாய்ந்த கோட்பாட்டின் மூலம், புதிய ரக சர்வதேச உறவை உருவாக்குவதற்குச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இப்பழமொழியைப் பயன்படுத்தி விளக்கிக் கூறினார்.

16ஆம் நாள் துவங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் ஷி ச்சின்பிங் விடுத்த வேண்டுகோளில்,

உலக நாகரிகத்தின் பல்வகைமைக்கு மதிப்பு அளித்து, நாகரிக பரிமாற்றத்தின் மூலம், நாகரிக இடைவெளியைத் தாண்டி, பல்வகை சர்வதேச அறைகூவல்களைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்றார்.