மனித உரிமை விவகாரத்தில் இரட்டை வரையறை கொண்ட அமெரிக்கா
2022-10-21 18:54:46

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதிக் குழுவின் தற்காலிக தலைவர் டாய்பிங் அக்டோபர் 20ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கா வளரும் நாடுகளின் மீது பழி சுமத்தி வருகிறது. ஆனால், உள்நாட்டிலும், தனது கூட்டணி நாடுகளிலும் மோசமாகி வருகின்ற மனித உரிமை நிலைமையைக் கண்டும் காணாடிலும் உள்ளது. ரட்டை வரையறை வெளிக்காட்டும் இச்செயல் மிகவும் போலித்தனமானது என்றார்.

மேலும், சீனாவின் மனித உரிமையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அக்கறை காட்டவில்லை. மனித உரிமையைப் பயன்படுத்தி, சீனாவின் உள் விவகாரத்தில் தலையிட்டு, சீனாவின் சூழ்நிலையைக் குழப்பமாக்கி, சொந்த மேலாதிக்கவாதத்தைப் பேணிக்காப்பது தான், இந்நாடுகளின் நோக்கமாகும் என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.