ரஷிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர்களின் தொடர்பு
2022-10-22 15:08:34

ரஷிய பாதுகாப்பு அமைச்சர் ஷொய்கு 21ஆம் நாள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டினுடன் தொலைபேசி மூலம் உக்ரைன் நிலைமை உள்ளிட்ட சூடான சர்வதேசப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

இதில் ரஷிய-உக்ரைனிய மோதலின் போது அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையில் தடையில்லாத பரிமாற்றத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை ஆஸ்டின் வலியுறுத்தினார் என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

அன்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் லெஸ்னிகோவுடனும் ஆஸ்டின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.