சோஷலிச நவீனமயமாக்க வல்லரசைக் கட்டியமைக்கப் பாடுபடுவோம்:ஷிச்சின்பிங்
2022-10-22 18:53:23


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு 22ஆம் நாள் காலை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இந்நிறைவுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

18ஆவது மாநாட்டுக்குப் பிந்திய 10 ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் புதிய காலக்கட்டத்தில் நுழைதல், குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை முழுவதையும் கட்டியமைக்கும் முதலாவது நூற்றாண்டு இலக்கை நிறைவேற்றுதல் ஆகிய 3 முக்கிய சாதனைகளை நாங்கள் படைத்துள்ளோம் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

தற்போது முதல், முழு நாட்டிலுள்ள அனைத்து தேசிய இன மக்களுக்குத் தலைமை தாங்கி, சீனாவை சோஷலிச நவீன வல்லரசைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் இராண்டாவது நூற்றாண்டு இலக்கை நனவாக்கவும், சீனப் பாணி நவீனமயமாக்கத்தின்படி சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்கவும் பாடுபடுவோம்.

சோஷலிச நவீன வல்லரசைப் பன்முகங்களிலும் கட்டமைக்கும் நெடுநோக்கு திட்டம், 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. 2020 முதல் 2035ஆம் ஆண்டு வரை, சோஷலிச நவீனம் அடிப்படையாக நனவாக்கப்படும். 2035 முதல் இந்நூற்றாண்டின் நடு பகுதிக்குள், செழுமை, ஜனநாயகம், நாகரிகம் மற்றும் நல்லிணக்கம் வாய்ந்த அழகான சோஷலிச நவீனமயமான வல்லரசாக, சீனா கட்டியமைக்கப்படும் என்று இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 100 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் அனைத்து தேசிய இன மக்களுக்கும் தலைமை தாங்கி, புதிய ஜனநாயக புரட்சி, சோஷலிச புரட்சி மற்றும் கட்டுமானம், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, சோஷலிச நவீனமயமாக்கக் கட்டுமானம் ஆகியவற்றின் பெரும் வெற்றிகளைப் பெறுள்ளது. மேலும் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசத்தின் புதிய காலத்தையும் உருவாக்கியுள்ளது என்று ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.