அடுத்த ஆண்டு மூன்றாவது நிலவுத்திட்டத்தை தொடங்க இந்தியா முடிவு!
2022-10-22 15:26:16

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக, அகில இந்திய வானொலி நிலையம்  வெள்ளிக்கிழமை தெரிவித்தது.  

2024ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப, இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக, அகில இந்திய வானொலி நிலையம் மேலும் தெரிவித்தது. 

கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பினால், மூன்றாவது நிலவு திட்டமான சந்திரயான்-3 இன் முன்னேற்றம் தடைபட்டதாக, இந்தியாவின் விண்வெளித் துறைக்கான மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.