சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு நிறைவு
2022-10-22 15:10:38

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு 22ஆம் நாள் காலை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இந்நிறைவுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

20ஆவது மத்திய கமிட்டி, ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையம் ஆகியவை இக்கூட்டத்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. 19ஆவது மத்திய கமிட்டியின் அறிக்கை, ஒழுங்கு பரிசோதனைக்கான 19ஆவது மத்திய ஆணையத்தின் பணியறிக்கை முதலியவை தொடர்பான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனம்(திருத்தம்)தொடர்பான தீர்மானமும் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.