ஐரோப்பிய நாடுகளிடையில் இயற்கை எரிவாயு விலையின் மேலெல்லை பற்றி உடன்பாடு வரவில்லை
2022-10-22 15:31:57

ஐரோப்பிய ஒன்றிய மாநாடு இரு நாட்கள் நடைபெற்று 21ஆம் நாள் பிரசல்ஸில் நிறைவடைந்தது. நீண்ட நேர கலந்தாய்வு மேற்கொண்டாலும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இயற்கை எரிவாயு விலையின் மேலெல்லை பற்றி உடன்பாட்டை எட்ட முடியவில்லை.

இம்மாநாட்டுக்குப் பின் வெளியான அறிக்கையில், தற்போதைய எரியாற்றல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, எரியாற்றல் தேவையைத் தொடர்ந்து குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் முழு ஐரோப்பிய ஒன்றியச் சந்தையிலும் எரியாற்றல் விலையைக் குறைத்து, தனிச் சந்தையின் முழுமைத் தன்மையைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எரியாற்றல் துறை கட்டமைப்பில் கடும் வேறுபாடுகள் நிலவியதால், கடந்த சில மாதங்களில் எரியாற்றல் நெருக்கடியை எப்படி சமாளிப்பது பற்றி பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையில் தகராறு நீங்காமல் இருந்து வருகின்றது.