கோவிட்-19 பாதிப்பு விரைவில் நீங்காது : பிரதமர் நரேந்திர மோடி
2022-10-23 15:18:39

கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் விரைவில் நீங்காது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.

வேலைவாய்ப்புக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, உரையாற்றும் போது பிரதமர் நரேந்திர மோடி இதை தெரிவித்தார். இதில் அவர் அரசுப் பணிக்கான 75,000 பணி நியமனக் கடிதங்களை விண்ணப்பதாரர்களுக்கு வழங்கினார்.

"நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் தொற்றுநோயின் பக்க விளைவுகள் 100 நாட்களில் மறைந்துவிடாது" என்று கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயினால் ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, இந்திய அரசாங்கம் தீவிரமாக

செயல்பட்டு வருவதாக மோடி கூறினார்.