உலகின் பல்வேறு கட்சிகளும் அரசுத் தலைவர்களும் சிபிசி 20ஆவது தேசிய மாநாட்டுக்கு வாழ்த்து
2022-10-23 15:06:23

உலகின் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசுத் தலைவர்கள், சமூக வட்டாரத்தினர்கள் முதலியோர், சிபிசி 20ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட்)தலைவரும் மாநிலங்களவை தலைவருமான டீம்ஷினா வாழ்த்து தெரிவிக்கையில், ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சீனா மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, பிரேசில் முன்னேற்றக் கட்சி, குரோஷிய சமூக ஜனநாயகக் கட்சி, பாலஸ்தீன மக்கள் கட்சி, ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிசம்)முதலிய கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.