சீனாவின் வெற்றிகரமான வறுமை ஒழிப்பில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளலாம்
2022-10-23 15:18:01

சீனாவின் வறுமை ஒழிப்பின் வெற்றிக் கதையிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் "சீனா எப்படி தீவிர வறுமையை வென்றது மற்றும் அது இந்தியாவிற்கு என்ன பாடங்களைக் கொண்டுள்ளது" என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைத்தது.

சராசரியாக, கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும், சீனாவில் 1.9 கோடி ஏழை மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று அக்டோபர் 10 ஆம் நாள் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வறுமை ஒழிப்பிற்கு இரண்டு முக்கிய தூண்கள் உள்ளன. முதலாவது, பரந்த அடிப்படையிலான பொருளாதார மாற்றத்தால் ஆதரிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி. இரண்டாவது, வறுமையை ஒழிப்பதற்கான அரசின் கொள்கைகள்.

இந்தியாவில் அதிக ஏழைகள் இருப்பதாக, உலக வறுமை குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.