புதிதாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப்பீடம்
2022-10-23 13:15:01

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிரந்தர உறுப்பினர்கள், மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆகியோர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் முதலாவது முழு கூட்டத்தில் 23ஆம் நாள் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் ஷிச்சின்பிங் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஷிச்சின்பிங், லீ ச்சியாங், ட்சாவ் லெஜி, வாங் ஹுனிங், ட்சாய் ச்சி, டிங் சூக்ஸியாங், லீ சியே ஆகியோர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டத்துக்குப் பின், அவர்கள், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தினர்.