அமெரிக்காவின் இரட்டை வரையறைக்கு மாக்ரான் குற்றச்சாட்டு
2022-10-23 15:07:49

பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரான், அமெரிக்கா ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த திரவ எரிவாயுவின் உயர் விலை குறித்து மீண்டும் மனநிறைவின்மை தெரிவித்தார். அக்டோபர் 21ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில், வர்த்தகம் மற்றும் எரியாற்றல் கொள்கைகளில் அமெரிக்கா இரட்டை வரையறையைப் பின்பற்றிச் செயல்படுவதை மாக்ரான் குற்றம் சாட்டினார்.

அவர் கூறுகையில், உள்நாட்டில் எரியாற்றல் குறைந்த விலையில் விற்கப்படும் அதே வேளையில், அமெரிக்கா, வரலாற்றில் காணாத உயர் விலையில், ஐரோப்பாவுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்க அரசு வெளியிட்ட பணவீக்கக் கட்டுப்பாட்டுச் சட்டம், அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்குத் தாராள மானியம் வழங்கி வருகிறது. அது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான நியாயமான போட்டி சூழ்நிலையைச் சீர்குலைக்க வாய்ப்புண்டு என்று பிரான்ஸ்  மற்றும் ஜெர்மனி அதிகாரிகள், அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.