அங்கீகரிக்கப்பட்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனம் (திருத்தம்)
2022-10-23 13:12:18

22ஆம் நாள் நிறைவடைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனம் (திருத்தம்)அங்கீகரிக்கப்பட்டது. புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் புதிய சிந்தனை, இத்திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 20ஆவது தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் கடமையின் படி, சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் நெடுநோக்கு இலக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, 2035ஆம் ஆண்டில் சோஷலிச நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்கி, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீனாவை ஒரு சோசலிச நவீனமயமாக்க வல்லரசாகக் கட்டியமைக்கப்படும். இது தான் சீனத் தேசத்தின் "இரண்டாம் நூற்றாண்டு இலக்கு" ஆகும்.

அதே வேளையில், நவீனமயமாக்கத்துக்கான சீன வழியின் மூலம் சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை முன்னேற்றுவது, முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயகம் முதலிய உள்ளடக்கங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாற்றங்கள் கட்சியின் சொந்த கட்டுமானத்துக்கும் சீனாவில் பல்வேறு இலட்சியங்களின் வளர்ச்சிக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.