சீன வளர்ச்சி சிந்தனைக்கு சர்வதேச இளைஞர்கள் உடன்பாடு:பொது மக்கள் கருத்து கணிப்பு
2022-10-24 18:36:53

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு முன்வைத்த நவீனமயமாக்கச் சிந்தனைக்கு, உலகளவில் இளைஞர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளனர். உலகின் 30 நாடுகளில் 30 வயதுக்குட்பட்ட 4700 இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பொது மக்கள் கருத்து கணிப்பின்படி, சொந்த நாட்டின் நிலைமைக்கிணங்க, வளர்ச்சி பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்று 84.7 விழுக்காட்டினர் கருதினர். 80 விழுக்காட்டுக்கு மேலானோர், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி சிந்தனைக்கு உடன்பாடு தெரிவித்தனர் என்று குறிப்பிடப்பட்டது.

இக்கருத்து கணிப்பு, சீன ஊடக குழுமத்தின் சிஜிடீஎன் சிந்தனைக் கிடங்கு, சீனாவின் ரென் மின் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது. அதற்குள்ளாக்கப்பட்ட 40 விழுக்காட்டினர், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா முதலியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆவர்.