சீனாவின் புதிய பயணம் உலகத்தின் புதிய வாய்ப்பு
2022-10-24 10:01:18

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் 23ஆம் நாள் மதியம் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

புதிய காலத்திலும் புதிய பயணத்திலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியக் கடமையை சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இச்சந்திப்பில் விளக்கினார். இனிமையான வாழ்க்கையின் மீது பொது மக்களின் விருப்பங்களை நனவாக்கி, சீனாவின் வளர்ச்சியைப் பயன்படுத்தி உலகிற்கு மேலதிகமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சீன பாணியிலான நவீனமயமாக்கத்தின் தனிச்சிறப்பும் அதற்கான கோரிக்கையும் இம்மாநாட்டில் ஐயமுற எடுத்துக் கூறப்பட்டன. இது குறித்து ஷி ச்சின்பிங் கூறுகையில்,

சீன பாணி நவீனமயமாக்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன பொது மக்களும் நீண்டகால ஆய்வு மற்றும் நடைமுறையின் மூலம் பெற்றுள்ள சாதனையாகும். இது பெருமை தரும் அதே சமயம் கடினமான இலட்சியமுமாகும் என்றார்.

மூலதனத்தை மையமாகக் கொண்டு, சமத்துவமின்மை அதிகமாக நிலவும் மேலை நாடுகளின் நவீனமாயமாக்கத்துடன் ஒப்பிட்டால், சீனா புதிய நவீனமயமாக்க பாதையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இது மனித நவீனமயமாக்கத்துக்கு புதிய தேர்வை வழங்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது.