© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இந்தியா ஞாயிற்றுக்கிழமை LVM3 ஏவூர்தியின் மூலம், 36 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்று இஸ்ரோ தெரிவித்தது.
உள்ளூர் நேரப்படி 23ஆம் நாள் 0:07 மணிக்கு ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்த ஏவூர்தி ஏவப்பட்டது.
இந்தியாவின் ஏவூர்திகளில், 6 டன் தாங்குசுமையுடன் கூடிய முதலாவது ஏவூர்தி LVM3 என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஏவுதலில் அதன் தாங்குசுமை 5.796 டன்னை எட்டியது.