முதல் 3 காலாண்டுகளில் சீனப் பொருளாதாரம் 3.0விழுக்காடு வளர்ச்சி
2022-10-24 11:23:58

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் திங்கள்கிழமை வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டின் 3ஆவது காலாண்டில் பொருளாதாரம் தொர்ச்சியாக மீட்சியுற்றுள்ளது. உற்பத்தித் தேவை நிலையாக மேம்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் விலைவாசி நிலைமையும் நிதானமாக உள்ளது. முதல் 3 காலாண்டுகளில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 87லட்சத்து 2690கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டில் இருந்ததை விட, 3விழுக்காடு அதிகமாகும்.

மேலும், சுங்கத் துறை வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை 31லட்சத்து 11ஆயிரம் கோடி யுவான் ஆகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட, 9.9விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.